< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
எட்டயபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
|6 July 2023 12:15 AM IST
எட்டயபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்து போனார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள சின்னமலைகுன்று கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக எட்டயபுரம் பஜாருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டியில் இருந்து பலசரக்குகளை வாங்கிக்கொண்டு படர்ந்தபுளி கிராமத்திற்கு பலசரக்கு கடைக்காரர் சங்கர் ராஜ்(53) என்பவர் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்துள்ளார். எதிர்பாராத விதமாக அந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தங்கவேல் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி ெசன்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்