< Back
மாநில செய்திகள்
எட்டயபுரத்தில்  இந்து ஆட்டோ தொழிலாளர்சங்க கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

எட்டயபுரத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்சங்க கூட்டம்

தினத்தந்தி
|
16 Oct 2023 12:15 AM IST

எட்டயபுரத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.

எட்டயபுரம்:

எட்டயபுரம் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சக்திவேல், மாவட்ட தலைவர் கணேஷ் ரவி மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் வருகிற நவ. 4-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழுவில் இந்து ஆட்டோ முன்னணி சங்கத்தின் பொறுப்பாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்