< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில்நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
1 Oct 2023 3:08 AM IST

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் நவநீதன் முன்னிலை வகித்தார்.

காவிரி நதி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், உரிமையை பெற்று தர மறுக்கும் மத்திய அரசையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்