< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில்தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
15 April 2023 3:39 AM IST

ஈரோட்டில், தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோட்டில், தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு கனி அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை தரிசனம் செய்ய காலையில் இருந்தே கோவிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்தனர். இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், கோவில் வளாகத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கு புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல் கோட்டை பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர். இதையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சாமி தரிசனம்

ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வள்ளி-தெய்வானை சமேத வேலாயுதசாமியின் உற்சவ சிலைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். இதேபோல் மோளக்கவுண்டன்பாளையம் சித்தி விநாயகர் கனி அலங்காரத்திலும், சூரம்பட்டி நால்ரோடு வலம்புரி விநாயகர் கனி அலங்காரத்திலும், ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில், வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர், ஈரோடு -சத்தி ரோடு எல்லை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், பெண்கள் தங்களது வீடுகளிலும் பல்வேறு பழங்கள், பூஜை பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்