< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
2 Sept 2023 1:53 AM IST

ஈரோட்டில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் மரப்பாலம் 6-வது வீதி கே.ஏ.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் தமிழரசன் (வயது 24) என்பதும், மரப்பாலம் 2-வது வீதியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (23) என்பதும் இவர்கள் அங்கு நின்றுகொண்டு போதை மாத்திரை விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 46 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்