ஈரோடு
ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையங்களுக்கு மீண்டும் சீல் வைப்பு
|ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையங்களுக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.
ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு தமிழக அரசு கடந்த மாதம் 15-ந்தேதி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த மாதம் 27-ந்தேதி ஆஸ்பத்திரிக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த கோர்ட்டு நேற்று முன்தினம் மீண்டும் ஆஸ்பத்திரிக்்கு சீல் வைக்க உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி தலைமையில் அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரியின் 10 ஸ்கேன் எந்திரங்களுக்கும், அவைகள் வைக்கப்பட்டுள்ள 4 அறைகளுக்கும் சீல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவ நல பணிகள் துணை இயக்குனர் பிரேமகுமாரி கூறும்போது, 'இந்த ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளை வெளியேற்றுவதற்கு நேற்று (அதாவது நேற்று முன்தினம்) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் 46 நோயாளிகள் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 48 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நாளை (அதாவது இன்று) மருத்துவமனைக்கு சீல் வைக்கும் பணி நடைபெறும். மேலும் ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் ஸ்கேன் மையங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டு உள்ளது' என்றார்.