< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஈரோட்டில்ஓணம் பண்டிகை கொண்டாட்டம்அத்தப்பூ கோலம் போட்டு பெண்கள் மகிழ்ந்தனர்
|16 Oct 2023 7:20 AM IST
ஈரோட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அத்தப்பூ கோலம் போட்டு பெண்கள் மகிழ்ந்தனர்
கேரளா மாநில பொதுமக்கள் சார்பில் ஈரோட்டில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகாபலி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் மகாபலி மன்னர் வேடம் அணிந்து ஒருவர் சென்றார். அவர் மீது பூக்கள் தூவி கேரளா பெண்கள் வரவேற்றனர். ஈரோடு இடையன்காட்டுவலசு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூடம் முன்பு தொடங்கிய ஊர்வலம் நசியனூர் ரோடு, தியாகி குமரன் ரோடு வழியாக சென்று சம்பத்நகரில் நிறைவு பெற்றது.
அதைத்தொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்கு பெண்கள் அத்தப்பூ கோலம் போட்டு மகிழ்ந்தனர். மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும், ஓணம் விருந்தும் நடந்தது.