< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்  மாரத்தான் போட்டி; 1,300 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்பு
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் மாரத்தான் போட்டி; 1,300 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்பு

தினத்தந்தி
|
7 Aug 2022 9:01 PM GMT

ஈரோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் 1,300 வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஈரோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் 1,300 வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டி

ஈரோட்டில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்களுக்கு 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடந்தது.

பரிசு

மேலும் குழந்தைகளுக்கு 1½ கிலோ மீட்டர் பிரிவிலும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வீரர் -வீராங்கனைகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி வேகமாக ஓடினார்கள். 5 கிலோ மீட்டர் தூரம், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் தொடங்கி நரிக்கல் மேடு, வீரப்பன்சத்திரம் வழியாக மீண்டும் வ.உ.சி. பூங்காவில் முடிவடைந்தது.

இதேபோல் 10 கிலோ மீட்டர் தூரம் வ.உ.சி. பூங்காவில் தொடங்கி பி.பி.அக்ரஹாரம், கனிராவுத்தர்குளம் வழியாக மீண்டும் வ.உ.சி.பூங்காவில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வெற்றிபெற்ற வீரர் -வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்