< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்  தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்கள்;  அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்கள்; அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது

தினத்தந்தி
|
25 July 2022 2:23 AM IST

ஈரோட்டில் தயார் நிலையில் உள்ள விலையில்லா சைக்கிள்கள் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்ததால், இந்த ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

ஈரோடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு ஏற்கனவே சைக்கிள்களின் உதிரி பாகங்கள் வந்து இறங்கின. அங்கு சைக்கிள்களை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சைக்கிள்கள் முழுமையாக பொருத்தப்பட்டு மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விலையில்லா சைக்கிள்களை வாங்குவதற்கும் மாணவ- மாணவிகள் ஆர்வமாக உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் 9 ஆயிரத்து 246 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்