< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோட்டில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்27-ந் தேதி நடக்கிறது
|23 Oct 2023 2:29 AM IST
ஈரோட்டில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27-ந் தேதி நடைபெறுகிறது
ஈரோடு மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 27-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. பகல் 11.30 மணி வரை விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும். 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பகுதி பிரச்சினை தொடர்பான கருத்துகளை தெரிவிக்கலாம். அதன்பிறகு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவல் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.