< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி என்ஜினீயர் தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில்கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி என்ஜினீயர் தற்கொலை

தினத்தந்தி
|
16 Oct 2023 6:32 AM IST

ஈரோட்டில் கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோட்டில் கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

மனவேதனை

ஈரோடு எஸ்.கே.சி. ரோடு முதல் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி சுகந்தி. மகன் மதிவதன சுந்தரம் (வயது 31). என்ஜினீயர்.

மதிவதனசுந்தரம் தனது தந்தையுடன் மளிகை கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். சந்திரசேகரனுக்கும், சுகந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மனைவியை பிரிந்து, ஈரோடு -கரூர் ரோடு காந்திஜி வீதியில் கடந்த 7 மாதங்களாக சந்திரசேகரன் தனியாக வசித்து வருகிறார். மதிவதன சுந்தரம் தனது தாயுடன் வசித்து வந்தார். மேலும் வேலை விஷயமாக தந்தை வீட்டுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம் இந்த நிலையில் மதிவதன சுந்தரம் கடந்த சில நாட்களாக ஏதோ மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சம்பவத்தன்று அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.

தற்கொலை

அங்கு சந்திரசேகரன் வீட்டில் இல்லை. இதைத்தொடர்ந்து மதிவதன சுந்தரம் வீட்டில் புதிதாக வாங்கி வைக்கப்பட்டு இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து, அதில் குழாயின் ஒரு பகுதியை தனது மூக்கில் சொருகி உள்ளார். பின்னர், பிளாஸ்டிக் கவரை கொண்டு முகத்தை நன்கு மூடிக்கொண்டு ரப்பரால் இறுக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சிலிண்டரில் இருந்து வந்த கியாசை சுவாசித்து உள்ளார்.

இதில் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மதிவதன சுந்தரம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, மதிவதன சுந்தரத்தின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்