< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்எலக்ட்ரீசியன் அடித்து கொலை?
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில்எலக்ட்ரீசியன் அடித்து கொலை?

தினத்தந்தி
|
14 April 2023 3:42 AM IST

ஈரோட்டில் எலக்ட்ரீசியன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் எலக்ட்ரீசியன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூக்கில் ரத்தம் வழிந்தபடி...

ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு சந்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மூக்கில் ரத்தம் வழிந்தபடி கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சில் டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த நபர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

எலக்ட்ரீசியன்

இதையடுத்து போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான ராஜேந்திரன் (வயது 48) என்பதும், அவர் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் தன்னுடன் வேலை பார்க்கும் ஈரோட்டை சேர்ந்த 2 பேருடன் மது அருந்திய போது அவர்களுடன் தகராறு ஏற்பட்டு பின்னர் இங்கு வந்து இறந்திருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனுடன் மது அருந்திய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் தான் ராஜேந்திரனை அடித்து கொலை செய்தார்களா? அல்லது மது போதையில் கீழே விழுந்து இறந்தாரா? என்பது குறித்து தெரியவரும். இறந்த ராஜேந்திரனுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்