< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில்மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

தினத்தந்தி
|
15 Oct 2023 7:00 AM IST

ஈரோட்டில் மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாணவ -மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். ஈரோடு கனிராவுத்தர்குளம் சேமூர் அம்மன் நகரில் இருந்து வில்லரசம்பட்டி 4 வழிச்சாலை பிரிவு வரை ஒரு பிரிவினரும், திண்டல் வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரி வரை மற்றொரு பிரிவினரும் சென்றுவிட்டு மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து முடித்தனர். 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகள் 10 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகள் 15 கிலோ மீட்டர் தூரமும் சென்றனர். இதைத்தொடர்ந்து முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்