< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில், செல்போன் கடை உரிமையாளரிடம்6½ பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில், செல்போன் கடை உரிமையாளரிடம்6½ பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
14 April 2023 3:07 AM IST

ஈரோட்டில், செல்போன் கடை உரிமையாளரிடம் 6½ பவுன் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில், செல்போன் கடை உரிமையாளரிடம் 6½ பவுன் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கிலி பறிப்பு

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 36). இவர் மேட்டூர் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென தகராறில் ஈடுபட்டதோடு, ரகுவையும் தாக்கி உள்ளனர். பின்னர் ரகுவின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக புறப்பட்டனர்.

வாலிபர் கைது

உடனே ரகு தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை துரத்தி சென்றார். இதை அறிந்த அவர்கள் மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதைத்தொடர்ந்து ரகு இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி ரகுவிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக ஈரோடு பழைய கரூர் ரோடு கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரன் (30) என்பவரை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய ஈரோட்டை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்