< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஈரோடு நாடார் மேட்டில் விபத்தை ஏற்படுத்தும் மின்கம்பங்கள்
|22 Sept 2023 5:51 AM IST
ஈரோடு நாடார் மேட்டில் மின்கம்பங்கள் விபத்தை ஏற்படுத்துகின்றன.
ஈரோடு நாடார்மேடு லெனின் வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு இருந்த மின் கம்பங்கள் சாலையோரமாக இடமாற்றம் செய்யாமல் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்கள் வெளிச்சமின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் மின்கம்பமும் சாலையிலேயே இருப்பதால் எதிரில் வாகனம் வரும்போது, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மின்கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு அருகில் செல்லும் ஓடையின் தடுப்புச்சுவரும் உடைந்து விட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பங்களை சாலையோரமாக இடமாற்றம் செய்யவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.