ஈரோடு
ஈரோட்டில் ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை
|ஈரோட்டில் ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டல் தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் அயிலம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 35). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரவீன்குமார் மனைவியை பிரிந்து கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மரப்பாலத்தில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பிரவீன்குமார் வேலை முடிந்த பிறகு வழக்கம்போல் வீட்டுக்கு சென்று தூங்கினார். மறுநாள் காலையில் அவர் வேலைக்கு வரவில்லை. இதனால் ஓட்டலில் வேலை பார்க்கும் ஒருவர் பிரவீன்குமாரை அழைத்து வருவதற்காக வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரவீன்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தற்கொலை
இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரவீன்குமார் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மனவேதனையில் பிரவீன்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்