< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்100 அடி உயர புதிய கொடிக்கம்பம்
|15 Aug 2023 6:00 AM IST
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 100 அடி உயர புதிய கொடிக்கம்பம் ஏற்றப்படுகிறது.
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தின் நுழைவு பகுதியில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அந்த கொடிக்கம்பத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதையொட்டி கொடிக்கம்பம் உள்ள பகுதியை கலெக்டர் நேற்று பார்வையிட்டு விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.