நாகப்பட்டினம்
சோழவித்யாபுரத்தில் சந்தனமாதா ஆலய தேர்பவனி
|சோழவித்யாபுரத்தில் சந்தனமாதா ஆலய தேர்பவனி நடந்தது.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயான தூய சந்தன மாதா ஆலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி நேற்று நடைபெற்றது. தேரை கருங்கண்ணி பங்கு தந்தை டேவிட்செல்வகுமார் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். மின் அலங்கார தேருக்கு முன்னதாக மிக்கேல் சம்மன்சு, அந்தோணியார்,சூசையப்பர் ஆகிய தேர்களும் சென்றன. தேர் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது.இதில் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாங்கண்ணி தியான இல்ல இயக்குனர் செபஸ்தியான் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் வேளாங்கண்ணி பேராலய உதவி பங்குத்தந்தை டேவிட்தனராஜ், அருட்தந்தையர்கள் மார்ட்டின், லூர்துசேவியர், ஆரோக்கியசாமி மற்றும் சோழவித்யாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.