< Back
மாநில செய்திகள்
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்
ஈரோடு
மாநில செய்திகள்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
22 July 2022 3:26 AM IST

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

அம்மாபேட்டை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தொடங்கி பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பெருந்துறை, தர்மபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு, ஊக்கியம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 11 ஆயிரம் மூட்டைகளில் பி.டி. ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

ரூ.3½ கோடி

இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 879-க்கும் அதிகபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 919-க்கும் என மொத்தம் ரூ.3 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் போனது. கோவை, அன்னூர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, திருப்பூர், கொங்கணாபுரம், பெருந்துறை, பவானி, அந்தியூர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்து சென்றனர். பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தொடர்ந்து 4 வாரங்களாக அதிக அளவில் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதுடன், தொடர்ந்து 4 வாரங்களாக ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையாவது இதுவே முதல் முறை ஆகும்.

Related Tags :
மேலும் செய்திகள்