ஈரோடு
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
|பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
அம்மாபேட்டை
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
பருத்தி ஏலம்
அம்மாபேட்டையை அடுத்துள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்துக்கு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், கோனேரிப்பட்டி, தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், பவானி, சித்தார், அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 6 ஆயிரத்து 828 மூட்டைகளில் பருத்தியை கொண்டு வந்திருந்தனர்.
போட்டி போட்டு...
ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடந்த ஏலத்தில் பிடி ரக பருத்தி குறைந்தபட்ச விலையாக ரூ.5ஆயிரத்து 689-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 19-க்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 58 ஆயிரத்து 31-க்கு ஏலம்போனது.
பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்து சென்றனர்.