< Back
மாநில செய்திகள்
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.16½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ஈரோடு
மாநில செய்திகள்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.16½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
21 Sept 2023 3:14 AM IST

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.16½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அடுத்துள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், கோனேரிப்பட்டி, எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், பவானி, சித்தார், அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 800 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் பி.டி. ரக பருத்தி குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 389-க்கும், அதிகபட்சமாக ரூ.7ஆயிரத்து 539-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16 லட்சத்து 59 ஆயிரத்து 594-க்கு பருத்தி ஏலம்போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம் மற்றும் அந்தியூர் பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுத்து சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்