< Back
மாநில செய்திகள்
அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை
மாநில செய்திகள்

அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
26 Oct 2023 2:48 AM IST

அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவனியாபுரம்

மதுரை அவனியாபுரம் பகுதியில் சமுதாய சங்கம் சார்பில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் முன்னாள் செயலாளராக மதுரை சிவா என்பவர் இருந்து வந்தார். தற்போது மீண்டும் பள்ளியில் அதே பதவி கேட்டு சில அடி ஆட்களுடன் அவர் பள்ளிக்குள் புகுந்து அலுவலகத்துக்கு பூட்டு போட்டதாக தெரிகிறது.

இந்த செயலை கண்டித்து, பள்ளி குழந்தைகளின் பெற்றோர், பள்ளி ஊழியர்கள், பள்ளிக்கூடத்துக்கு பூட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை சிவா என்பவர் மீது ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்