< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆம்பூர் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணுக்கு தாலி கட்டி அழைத்துச் செல்லும் இளைஞர்..! - வீடியோ வைரல்
|14 March 2023 9:52 PM IST
ஆம்பூர் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டியுள்ளார்.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் மிகவும் பிரபலமானது ஆகும். இங்கு தினந்தோறும் பொதுமக்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம்பூர் பேருந்து நிலையத்தில், இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுக்கு தாலி கட்டி அழைத்துச் சென்றுள்ளார். இதனை பேருந்து நிலையத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
வீடியோ பரவிவரும் நிலையில், திருமணம் செய்துகொண்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.