< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் மழை வேண்டி வேள்வி பூஜை
|4 July 2023 12:15 AM IST
ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் மழை வேண்டி வேள்வி பூஜை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி எம்.ஜி.ஆர் நகர் ஆதிபராசக்தி மன்றத்தில் பங்காரு அடிகளாரின் அவதார விழாவை முன்னிட்டு மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் பண்டார முருகன் சக்தி கொடி ஏற்றினார். வேள்வி பூஜையில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு 1008, 108 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொழிலதிபர் வி.தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார். விழாவில் பலர் கலந்து கொண்டனர்.