< Back
மாநில செய்திகள்
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

தினத்தந்தி
|
27 Jun 2022 10:44 PM IST

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

விழுப்புரம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா கச்சிமைலூர் பகுதியை சேர்ந்தவர் காரல்மார்க்ஸ்(வயது 21). இவரும் அதே பகுதியை சேர்ந்த பூஜா(19) என்பவரும் கடந்த சில மாதங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பூஜா குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காரல்மார்க்சும், பூஜாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்று அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதையறிந்த பூஜாவின் உறவினர்கள், காரல்மார்க்சை தொடர்புகொண்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காரல்மார்க்சும், பூஜாவும் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்து, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்