< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
அஸ்திர தேவதைக்கு தீர்த்தவாரி
|4 Aug 2023 1:48 AM IST
அஸ்திர தேவதைக்கு தீர்த்தவாரி நடந்தது.
சமயபுரம்:
ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-ஐ முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள அஸ்திர தேவதை, பெருவளை வாய்க்காலில் தீர்த்தவாரி கண்டருளுவது வழக்கம். அதன்படி நேற்று மாரியம்மன் கோவிலில் இருந்து சிறிய பல்லக்கில் மேளதாளங்கள் முழங்க அஸ்திர தேவதையை அங்குள்ள பெருவளை வாய்க்காலுக்கு எடுத்துச்சென்றனர். இதைத்தொடர்ந்து, அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.