< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
|22 March 2023 12:15 AM IST
அரூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது.
அரூர்
அரூரில் மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் தங்கராஜி தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமானுஜம் வரவேற்றார். நிர்வாகிகள் சுப்பிரமணியம், மாணிக்கம், நடராஜன், தாசில்தார் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் இந்த ஆண்டு சிறந்த நடுநிலைப்பள்ளிக்கான விருது பெற்ற ராயப்பன் கொட்டாய் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பிரேமா, நிர்வாகிகள் ராதா, லட்சுமி, பிரபா, வசந்தாபாய், ஜீனத் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.