< Back
மாநில செய்திகள்
அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு விதிகளின்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் 1,745 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் இருக்க வேண்டும்.

ஆனால், 981 பணியிடங்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட 981 பணியிடங்களில் தற்போது 556 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் விதிகளின்படி 1,189 பணியிடங்களும், அண்ணா பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை வைத்துப் பார்க்கும்போது 425 பணியிடங்களும் காலியாக உள்ளது தெரிய வருகிறது.

எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்தி, அந்த இடங்களை முறையான தேர்வுமூலம் நிரப்பிட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்