< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செய்தியாளரை தாக்கிய உதவி ஆய்வாளர், காவலர் - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி
|28 Oct 2022 5:19 PM IST
செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
தென்காசி,
செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த செய்தியாளரை, பாவூர்சத்திரம் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் தாக்கியதாக கூறி மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஆணையம், உதவி ஆய்வாளர் 2 லட்சம் ரூபாய், காவலர் ஒரு லட்சம் என மொத்தம் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், அந்த பணத்தை பாதிக்கப்பட்ட செய்தியாளருக்கு இழப்பீடாக வழங்கும்படி தீர்ப்பளித்தது.