கள்ளக்குறிச்சி
வளர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
|ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா திடீர் ஆய்வு செய்தார். முன்னதாக அவிரியூர் ஊராட்சியில் ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடம், புதியதாக அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாய், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர் கீழ்ப்பாடி, சாத்தபுத்தூர் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகள், கடம்பூர் கிராமத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கழிவு நீர் கால்வாய் அமைத்தல், சிமெண்டு சாலை அமைத்தல் ஆகிய பணிகளை ஆய்வு செய்த அவர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் துரைமுருகன், ஒன்றிய பொறியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.