< Back
மாநில செய்திகள்
உயர் கல்வியில் சேர மாணவர்களுக்கு உதவி
விருதுநகர்
மாநில செய்திகள்

உயர் கல்வியில் சேர மாணவர்களுக்கு உதவி

தினத்தந்தி
|
15 July 2023 2:12 AM IST

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் சேர மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் சேர மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர உள்ள மற்றும் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கூறப்பட்டதாவது:-

மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து 141 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் அவர்களின் குறைகளும் கேட்டறியப்பட்டது. உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரிடமும் அதற்கான காரணங்களையும், சூழ்நிலை, பொருளாதாரம் சரியான வழிகாட்டுதலின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வியை தொடரமுடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ-மாணவிகளிடம் அரசின் மூலம் வழிகாட்டும் திட்டம், சலுகைகள், ஊக்க தொகைகள், எதிர்கால வேலை வாய்ப்புகள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு முறையாக தேர்ந்ெதடுப்பது உள்ளிட்டவை குறித்தும் தீர்வுகளை எடுத்துக்காட்டியும் உயர்கல்வி தொடர்பான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

ஆலோசனை

மாணவர்களுக்கு தேவையான கல்வி கடன், தகுதியான கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான உதவிகள், பெற்றோரை இழந்த வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த தேவையான உதவிகள் வழங்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

வருவாய்த்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் மூலம் உயர்கல்வியை சார்ந்த தங்கள் துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி ஆலோசனை வழங்கினர்.

Related Tags :
மேலும் செய்திகள்