< Back
மாநில செய்திகள்
மின்தடை ஏற்பட்டால் உதவி மின்பொறியாளர்களை தொடர்புகொள்ளலாம் மின்வாரிய அதிகாரி தகவல்
சிவகங்கை
மாநில செய்திகள்

மின்தடை ஏற்பட்டால் உதவி மின்பொறியாளர்களை தொடர்புகொள்ளலாம் மின்வாரிய அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
9 Jun 2023 12:15 AM IST

மின்தடை ஏற்பட்டால் உதவி மின்பொறியாளர்களை தொடர்புகொள்ளலாம் என மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

மின்தடை ஏற்பட்டால் உதவி மின்பொறியாளர்களை தொடர்புகொள்ளலாம் என மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மின்தடை

சிவகங்கை மின்பகிர்மான வட்டத்தில் மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அரளிக்கோட்டை, ஜமீன்தார்பட்டி, வலையபட்டி, ஏரியூர், மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி, பெருங்குடி, நாமனூர், ஒக்கூர், பர்மா காலனி, காளையார்மங்கலம் பகுதியினர் உதவிமின் பொறியாளர் மதகுபட்டி பகிர்மானம் 9445853073 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். தமறாக்கி, குமாரபட்டி, கண்டாங்கிபட்டி, புதுப்பட்டி, இடையமேலூர், மங்காம்பட்டி, கோமாளிபட்டி, தேவன்கோட்டை, சிவந்திபட்டி பகுதியினர் உதவி மின்பொறியாளர் மலம்பட்டி பகிர்மானம் 9445853075 என்ற எண்ணையும், சிவகங்கை நகர், ரோஸ்நகர், முத்துநகர், ராகினிபட்டி, சமத்துவபுரம், அரசனேரி, கிழமேடு பகுதியினர் சிவகங்கை நகர் மின்பகிர்மானம் உதவி மின்பொறியாளர் 9445853076 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

முளக்குளம், சருகனேந்தல், வேம்பத்தூர், பச்சேரி, கருங்குளம், படமாத்தூர், வாணியங்குடி, வீரவலசை, பனையூர், மானாகுடி, அரசனி பகுதியினர் ஊரகம் மின் பொறியாளர் 9445853077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட பகுதியினர் மேலும் சந்தேகங்களுக்கு சிவகங்கை மின்பகிர்மானம் உதவி செயற்பொறியாளர் 9445853074 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

காளையார்கோவில்

மாந்தாளி, சீகூரணி, உசிலங்குளம், சருகனி, காட்டாத்தி, கல்லுவழி, குரந்தனி, கோபாலபுரம் பகுதியினர் காளையார்கோவில் உதவி மின்பொறியாளர் 9445853079 என்ற எண்ணையும் சோழபுரம், நாலுகோட்டை, விட்டனேரி, ஒருபோக்கி, செங்குளம், ஆலங்குளம், சூரக்குளம் பகுதியினர் நாட்டரசன்கோட்டை உதவி மின்பொறியாளர் 9445853081 என்ற எண்ணையும் அஞ்சாம்பட்டி, மாராத்தூர், நந்தனூர், புலிக்கண்மாய், ஆண்டுரணி, சிறுவேலங்குடி பகுதியினர் மறவமங்கலம் உதவி மின்பொறியாளர் 9445853082 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட பகுதியினர் தங்கள் சந்தேகங்களுக்கு உதவி செயற்பொறியாளர் காளையார்கோவில் பகிர்மானம் 9445853078 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

மேற்கண்ட அனைத்து மின்பகிர்மான எல்லைக்குட்பட்ட பகுதியினர் சிவகங்கை மின்பகிர்மானம் செயற்பொறியாளர் 9445853080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்