< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சொத்து குவிப்பு வழக்கு ஜூன் 5-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
|29 April 2023 12:25 AM IST
சொத்து குவிப்பு வழக்கு ஜூன் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருப்பவர் சாத்தூர் ராமச்சந்திரன். கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் வருகிற ஜூன் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.