< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பீட்டு முகாம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பீட்டு முகாம்

தினத்தந்தி
|
26 Oct 2023 1:15 AM IST

தொப்பம்பட்டியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பீட்டு முகாம் தொப்பம்பட்டியில் நடந்தது.

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், தொப்பம்பட்டியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் வட்டார வள மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வள மைய அலுவலர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அழகுராணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பழனி தனிதாசில்தார் மங்களபாண்டியன், கோல்டன் கல்வி நிறுவன நிர்வாகி மாசிலாமணி காளியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் மதிப்பீடு செய்து அடையாள அட்டை, உபகரணங்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்