< Back
மாநில செய்திகள்
மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களிடம் குறைகள் கேட்ட சட்டமன்ற உறுதிமொழி குழு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களிடம் குறைகள் கேட்ட சட்டமன்ற உறுதிமொழி குழு

தினத்தந்தி
|
25 Jun 2023 12:15 AM IST

மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களிடம் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் நேரில் குறைகளை கேட்டனர்.

பனைக்குளம்.

மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களிடம் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் நேரில் குறைகளை கேட்டனர்.

ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ நேற்று ராமநாதபுரம் வந்தார். அவர் கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, மனோகரன், ராமலிங்கம், விசுவநாதன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் இந்த குழுவினர் மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்றனர். அங்கு வசிக்கக்கூடிய இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அடிப்படை வசதிகள்

இதை தொடர்ந்து அத்தியாவசிய தேவையான சாலை வசதிகள், குடிநீர் பயன்பாட்டிற்கு இருந்து வரும் திறந்தவெளி கிணற்றை சீரமைத்திடவும், மகளிர் குழுக்களில் உள்ள மகளிர் திட்ட துறையின் மூலம் உரிய கடனுதவிகள் வழங்கிடவும் அதேபோல் பதிவு இல்லாத நபர்களுக்கு உரிய பதிவு செய்து அட்டை வழங்கிடவும் இங்கு படித்து வரும் பிள்ளைகளுக்கு தேவையான அடையாள அட்டைகள் மற்றும் வங்கி கணக்கு பெற்றுத் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கான தனி துணை கலெக்டருக்கு இக்குழு பரிந்துரை செய்தது. தற்போது புதியதாக இலங்கையில் இருந்து வரும் மக்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெற்றுத் தர இலங்கை தமிழர் நல ஆணையரிடம் குழுவினர் பரிந்துரை செய்யும் எனவும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் மற்றும் குழு உறுப்பினர்களுடன் சென்று ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு வழங்கி வரும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தவுடன் புதிதாக 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக உள்ள இடங்களை பார்வையிட்டு நோயாளிக்கு மருத்துவ சேவையை சிறந்த முறையில் செயல்படுத்திட வேண்டும் என வட்டார மருத்துவர் சுரேந்தர் மற்றும் மருத்துவர்களை அறிவுறுத்தினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்