< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேவைக்கான பணத்தை தராமல் தாக்குதல் - வாடிக்கையாளர் மீது பெண் பியூட்டிசியன் புகார்
|25 Oct 2023 10:15 PM IST
சேவைக்கான பணத்தை தராமல் வீட்டில் அடைத்து வைத்து தாக்கியதாக, வாடிக்கையாளர் மீது பெண் பியூட்டிசியன் புகார் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை கிண்டியில் செயல்படும் ஆன்லைன் நிறுவனத்தில் தி.நகரை சேர்ந்த பெண், பியூட்டிசியனாக பணியாற்றி வருகிறார். இவர் தி.நகர் பார்த்தசாரதிபுரம் பகுதியில் இருந்து வந்த ஆர்டருக்காக மேக்கப் செய்ய சென்றுள்ளார். மேக்கப் முழுமையாக முடிந்த நிலையில், அதற்கான சேவை கட்டணமாக ஆயிரத்து 175 ரூபாயை கேட்டுள்ளார்.
இந்த நிலையில் புருவத்தை சரியாக அலங்காரம் செய்யவில்லை என கூறி, அந்த பெண் வாடிக்கையாளர் பணம் தர மறுத்துள்ளார். மேலும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், அவரது கணவர் கதவை மூடி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தான் பணிபுரியும் நிறுவனத்தில் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பணியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார்.