திருநெல்வேலி
பெண் மீது தாக்குதல்; வாலிபர் கைது
|வீரவநல்லூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குளி சிவன் கோவில் கீழ வீதியை சேர்ந்தவர் மைதீன் பாத்து (வயது 67). இவருடைய கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறார். மைதீன் பாத்துவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (29) என்பவரின் குடும்பத்துக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மைதீன் பாத்து தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது, தெருவில் சென்ற நாயை பார்த்து வீட்டில் கட்டி போட்டு வளர்க்க மாட்டார்களா? என்று கூறினார். இதை மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களை தான் பேசுவதாக நினைத்து மைதீன் பாத்துவை அவதூறாக பேசி, தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மைதீன் பாத்து வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிந்து, மாரியப்பனை நேற்று கைது செய்தனர்.