< Back
மாநில செய்திகள்
பெண் மீது தாக்குதல்; வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பெண் மீது தாக்குதல்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
14 Oct 2023 2:04 AM IST

களக்காடு அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள தெற்கு எருக்கலைப்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் லலிதா (37). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஏசா மகன் ஜெயசிங் (20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று லலிதா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயசிங், அவரை வழிமறித்து அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயசிங்கை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்