< Back
மாநில செய்திகள்
பெண் மீது தாக்குதல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பெண் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
2 July 2023 12:15 AM IST

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கமுதி,

கமுதி அருகே ஒச்சத்தேவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த பொன்னையா மனைவி முனீஸ்வரி(வயது 49). இவர்களது மகன் கோட்டைச்சாமிக்கும்(26), அதே பகுதியை சேர்ந்த சண்முகநாதனுக்கும்(28) முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு முனீஸ்வரி வீட்டில் தனியாக இருந்த போது, சண்முகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சிவபாரதி (20), முத்துராமலிங்கம்(28) ஆகியோர் சென்று அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகவும், வீட்டை சேதப்படுத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த டிராக்டரை எடுத்து சென்று அருகில் இருந்த கருவேல மர காட்டுப்பகுதியில் நிறுத்தி சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில் கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாரதி, முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்