< Back
மாநில செய்திகள்
பெண் மீது தாக்குதல்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பெண் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
18 May 2023 12:15 AM IST

பெண் மீது தாக்குதல்

வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அகஸ்தியன்பள்ளி பூவன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சித்திரவேல் (வயது24). இவரது மனைவி சத்யா (20). சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது 2 பேருக்கும் ஏற்பட்ட தகராறில் சித்திரவேல், சத்யாவை தாக்கி அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த சத்யா வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து சித்திரவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்