< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பெண் மீது தாக்குதல்
|27 April 2023 8:52 PM IST
வேடசந்தூர் அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேடசந்தூர் அருகே உள்ள பாலப்பட்டி ஊராட்சி வள்ளிபட்டியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 36). விவசாயி. முன்விரோதம் காரணமாக இவரை, அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள், புதுவானிக்கரையை சேர்ந்த சண்முகவேல் ஆகியோர் மட்டையால் தாக்கினர். இதில் ஜெயந்தி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் பழனியம்மாள், சண்முகம் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.