திருநெல்வேலி
பெண் மீது தாக்குதல்
|களக்காட்டில் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் லூக்காஸ் மரிய பெர்ணாண்டஸ். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லலிதா (வயது 36) தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவரை பற்றி அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் ஆனந்த் அவதூறாக பேசி வந்துள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று லலிதா, அம்பேத்கர்நகர் நடுத்தெருவில் உள்ள ஆனந்த் வீட்டின் முன் சென்றபோது, ஆனந்த், அவரது சகோதரர் வின்சென்ட், தாயார் அற்புதம் ஆகியோர் லலிதாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த லலிதா சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆனந்த், அற்புதம், வின்சென்ட் ஆகியோரை தேடி வருகிறார்.