< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பெண் மீது தாக்குதல்
|22 Nov 2022 10:34 PM IST
வேனை ஓரமாக நிறுத்த சொன்னதால், ஆத்திரமடைந்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வடமதுரை அருகே உள்ள பி.கொசவபட்டி லக்கம்பட்டியை சேர்ந்தவர் சீரங்கம்மாள் (வயது 55). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பூபதி (24) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீரங்கம்மாள் தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது, பூபதி தன்னுடைய வேனை பாதையில் நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சீரங்கம்மாள் வேனை எடுத்து, ஓரமாக நிறுத்துமாறு பூபதியிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பூபதி, சீரங்கம்மாளை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சீரங்கம்மாளுக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சீரங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பூபதி மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.