< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே பெண் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு பதிவு
|19 Oct 2022 12:15 AM IST
கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்தகுமார். இவரது மனைவி அனிதா (வயது 25). சம்பவத்தன்று இவர், தனது பாட்டி அஞ்சலியை பார்க்க பெருவங்கூருக்கு சென்றார்.
அப்போது அங்கு அஞ்சலியை அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், சிந்தனைச் செல்வன், மோகன்குமார், பழனியம்மாள், கல்யாணி ஆகிய 5 பேர் தள்ளி கொண்டு இருந்தனர். இதை பார்த்த அனிதா, ஏன் எனது பாட்டியை தள்ளுகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் 5 பேரும் சேர்ந்து அனிதாவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனிதா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல், சிந்தனை செல்வன், மோகன்குமார், பழனியம்மாள், போலீசார் கல்யாணி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.