திருநெல்வேலி
பெண் மீது தாக்குதல்
|பெண் மீது தாக்குதல் நடந்தது
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள மாவடி ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார். டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் நாராயணனுக்கும் பொது முடுக்கு சம்பந்தமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வகுமாரின் மனைவி வாணிஸ்ரீ (வயது 34) பொதுமுடுக்கு வழியாக தண்ணீர் எடுத்து வந்தார். இதைப்பார்த்த நாராயணன் மனைவி கனகரெத்தினம் இந்த வழியாக வரக்கூடாது என்று வாணிஸ்ரீயிடம் கூறினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணனின் மகன் வெங்கடேஷ், வாணிஸ்ரீயை செங்கலால் தாக்கினார். இதில் காயம் அடைந்த வாணிஸ்ரீ ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி இதுதொடர்பாக வெங்கடேஷை தேடி வருகின்றனர்.