< Back
மாநில செய்திகள்
பெண் மீது தாக்குதல்
தேனி
மாநில செய்திகள்

பெண் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
2 Oct 2023 2:30 AM IST

பெண் மீது தாக்குதல் நடத்திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடும்பாறை அருகே உள்ள அருகுவெளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). அவருடைய மனைவி ஜோதியம்மாள் (34). கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நிலப்பிரச்சினை காரணமாக இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முருகன், தனது உறவினர்களான இளங்கோவன் (40), நந்தினி (35), பஞ்சம்மாள் (55), கருப்பாயி (58), வனம் (48) ஆகியோருடன் சேர்ந்து ஜோதியம்மாளை தாக்கினார். இதில் காயமடைந்த ஜோதியம்மாளுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், இளங்கோவனை கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்