< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
புதுப்பேட்டை அருகேமுன்விரோதத்தில் பெண் மீது தாக்குதல்
|17 Aug 2023 12:15 AM IST
புதுப்பேட்டை அருகே முன்விரோதத்தில் பெண்ணை ஒருவர் தாக்கினாா்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே உள்ள அம்மாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மனைவி விமலா (வயது 57). இவருக்கும் பக்கத்து வீட்டில் இருக்கும் பிரபு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விமலாவை பிரபு தாக்கி கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமலா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிரபுவை தேடி வருகின்றனர்.