< Back
மாநில செய்திகள்
மனைவிக்கு மிஸ்டுகால் கொடுத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்; தொழிலாளி கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மனைவிக்கு மிஸ்டுகால் கொடுத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்; தொழிலாளி கைது

தினத்தந்தி
|
30 Aug 2023 1:47 AM IST

தென்காசியில் மனைவிக்கு மிஸ்டுகால் கொடுத்ததை தட்டிக்கேட்டவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையம் கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் மாரிமுத்து (வயது 25). கட்டிட தொழிலாளி. இவர் ஒருவரது மனைவியின் செல்போனுக்கு அடிக்கடி மிஸ்டுகால் கொடுப்பதுடன் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர், மாரிமுத்துவிடம் தட்டிக்கேட்டு உள்ளார். அப்போது மாரிமுத்து அவரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்காசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தார்.

மேலும் செய்திகள்