< Back
மாநில செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
6 Jun 2023 12:51 AM IST

திசையன்விளையில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திசையன்விளை:

திசையன்விளை ராமசாமி சந்தில் மளிகைக்கடை நடத்தி வருபவர் ராயப்பன் (வயது 58). இவரது கடை முன்பு திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்த சுடலைமணி மகன் மகேஷ் (28) என்பவர் மதுபோதையில் தகராறு செய்தார். அதை ராயப்பன் மகன் அல்டமன் (24) தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மகேஷ் மளிகைக்கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து அல்டமனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவரது தந்தை ராயப்பன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்