< Back
மாநில செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
22 Oct 2022 8:15 PM IST

சாலையின் குறுக்கே மாடு வந்ததை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமதுரை அருகே உள்ள பாகாநத்தம் சத்யாநகரை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 30). இவர், வடமதுரை அருகே உள்ள எண்ணெய் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ந்தேதி இவர், கே.குரும்பபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கே.குரும்பபட்டியை சேர்ந்த முனியப்பன் (49), விக்னேஷ் (26) ஆகியோர் ஒரு பசுமாட்டை பிடித்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சாலையின் குறுக்கே பசு வந்ததால், அதன் மீது மோதி பாண்டித்துரை கீழே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டித்துரை, இதுகுறித்து அவர்களிடம் தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து பாண்டித்துரையை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த பாண்டித்துரைக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாண்டித்துரை புகார் அளித்தார். அதன்பேரில் முனியப்பன், விக்னேஷ் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்